தற்போது தமிழ்நாட்டில் பிள்ளைகளுக்கு காலாண்டு தேர்வு தொடங்கிவிட்டது. தேர்வுகளானது ஒருவரது அறிவை சோதிக்கின்றன. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நல்ல சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ளும் போது மூளை சிறப்பாக செயல்படும், தேர்வு நேரத்தில் மனம் பதட்டமடையாமல் இருக்கும், நீண்ட நேரம் கவனம் சிதறாமல் படிக்க முடியும்.
உங்கள் பிள்ளைகள் தேர்வு நேரத்தில் அதிகமாக பதட்டமடைவார்களா அல்லது படித்தது நினைவில் நிற்காமல் மறந்துவிடுகிறது என்று கூறுகிறார்களா? அப்படியானால் உங்கள் பிள்ளைகளுக்கு சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து கொடுங்கள். உங்களுக்கு தேர்வு நேரத்தில் பிள்ளைகளுக்கு எந்த மாதிரியான உணவுகளை கொடுக்க வேண்டும் என்பது தெரியாதா? கவலை வேண்டாம்.
உங்களுக்காகவே தேர்வு காலங்களில் கவனம் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கவும், உடல் மற்றும் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும் சில சிறந்த உணவுகளை பட்டியலிட்டுள்ளோம். அந்த உணவுகளை அறிந்து உங்கள் பிள்ளைகளுக்கு கொடுத்து வாருங்கள்.
1. பழங்கள் தேர்வு காலங்களில் பழங்களை உண்பது மிகவும் நல்லது. ஏனெனில் பழங்கள் உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கும் இயற்கை சர்க்கரையையும், வைட்டமின்களையும் கொண்டுள்ளன. * வாழைப்பழம் – உடலுக்கு உடனடி ஆற்றலைத் தந்து, உடல் சோர்வைத் தடுக்கும். * ஆப்பிள் – நீண்ட நேரம் வயிறு நிரம்பியிருக்கச் செய்யும் மற்றும் விழிப்புடனும் வைத்திருக்க உதவும். * ஆரஞ்சு – வைட்டமின் சி நிறைந்த இப்பழம் புத்துணர்ச்சி அளித்து, உடல் சோர்வை போக்கும்.



