உலகையே திரும்பி பார்க்க வைத்த சவுதி.. வேல்யூ மட்டும் பல ஆயிரம் கோடி! பிரம்மாண்டத்தின் உச்சம்

Date:

ரியாத்: வளைகுடாவில் மிக முக்கிய நாடுகளில் ஒன்றாக சவுதி அரேபியா இருக்கிறது. இப்போது உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் ஒரு பிரம்மாண்ட அறிவிப்பை சவுதி வெளியிட்டுள்ளது. இஸ்லாதத்தின் புனித நகரான மதீனாவுக்கு அருகே சவுதி பொருளாதாரத்தையே புரட்டி போடும் கண்டுபிடிப்பு நடந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!

சவுதி அரேபியாவின் மதீனா பகுதியில் சுமார் 11 கோடி டன் தாது பொருட்களில் யுரேனியம் மற்றும் அரிய கனிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதீனாவில் உள்ள ஜபல் சயீத் திட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்த கண்டுபிடிப்பு தெரிய வந்துள்ளதாக சவுதி எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல்அஜிஸ் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

ரேர் எர்த் மெடல்கள் ஜபல் சயீத் பகுதியில் கிடைக்கும் தாதுக்களில் ரேர் எர்த் மெடல்கள், குறிப்பாக ஹெவி ரேர் எதிர்த் மெடல்கள் கனிமங்கள் அதிக செறிவில் இருப்பதாகவும், அதே பகுதியில் யுரேனியமும் கூட கணிசமான அளவுக்கு இருப்பதாகவும் அமைச்சர் அப்துல்அஜிஸ் பின் சல்மான் கூறியுள்ளார். அந்த பகுதியில் சுமார் 110 மில்லியன் டன் தாது பொருட்கள் இருப்பது சவுதி மேற்கொண்ட ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.. இதில் விஷயமே ரேர் எர்த் மெடல்களுடன் யுரேனியம் இருப்பதும் தான். ஏனென்றால் யுரேனியம் அணுசக்தி உற்பத்தியில் முக்கியமான மூலப்பொருளாகும். மதீனா பகுதியில் இருக்கும் இந்த யுரேனியம் சவுதியின் எதிர்கால அணுசக்தி திட்டங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சவுதி அரேபியா வளைகுடாவில் மிக பெரிய பொருளாதாரத்தை கொண்டிருக்கும் சவுதி அரேபியா, நீண்ட காலமாக தனது பொருளாதாரத்திற்கு கச்சா எண்ணெய் வருவாயை மட்டுமே நம்பி இருந்து வருகிறது. ஆனால் கச்சா எண்ணெய் தேவை சர்வதேச அளவில் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், தனது பொருளாதாரத்தை பலதரப்படுத்த சவுதி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காகவே விஷன் 2030 திட்டத்தை சவுதி செயல்படுத்துகிறது. அதன் கீழ் எரிசக்தி மற்றும் கனிம வளங்களை பல்வகைப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து செய்து வருகிறது. மேலும், உள்நாட்டிலேயே யுரேனியத்தை பிரித்தெடுப்பது மற்றும் அணுசக்தி உற்பத்தியை மேம்படுத்துவது ஆகியவையும் மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் தான் மதீனாவில் யுரேனியம் மற்றும் அரிய கனிமங்கள் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

IND vs AFG: சாம்சன் அதிரடியால் தொடரை வென்ற இந்தியா.. 7 ஆண்டுகளாக தொடரும் சாதனை

டெல்லி: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி...

கண் அசைக்கும் பாஜக.. கட்சி தாவும் 17 பேர் கட்சி.. இதுதான் அரசியல் மியூசிக்கல் சேர்! பின்னணி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம்...

பரங்கிப்பேட்டையில் ஹைட்ரோகார்பன் கிணறு தோண்ட விண்ணப்பம்.. சட்டசபையில் அவசர கவன ஈர்ப்பு தீர்மானம்

சென்னை: பரங்கிபேட்டையில் புதிதாக ஹைட்ரோகார்பன் கிணறு தோண்டுவதற்கான விண்ணப்பத்தை ஹெச்ஓஇசிஎல் நிறுவனம்...

எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய முழு உரிமை உள்ளது.. ஆனால்..” – ஐகோர்ட் நீதிபதிகள் காட்டம்!

சென்னை: "எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முழு உரிமை உள்ளது. ஆனால், மக்கள்...